• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அரசு பஸ் கார் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் படுகாயம்..,

Byசோலைஆதி

Mar 30, 2026

சோழவந்தான் அருகே அரசு பஸ் கார் மேற்கு நீர் மோதியது இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். நிலக்கோட்டையில் இருந்து சோழவந்தான் வழியாக மதுரை ஆரப்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதில் காரில் பயணம் செய்த விக்கிரமங்கலம் கொம்பன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவேக மதுரை மாவட்ட வடக்கு வட்ட ஒன்றிய செயலாளர் சீனிவாசன் வயது 52, இவரிடம் வந்த சின்ன அண்ணன் வயது 48 முருகன் வயது 53 ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.

திருவேடகம் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி கிராம உதவியாளர் தினேஷ் ஆகியோர் சோழவந்தான் காவல் நிலையம் மற்ற ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்து படுகாயம் அடைந்த மூன்று பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.