கோவை விமான நிலையம் அருகே கடந்த 2 ம் தேதி இரவு கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் தனிமையில் இருந்தார். அப்பொழுது அங்கு வந்த மூன்று பேர் காதலனை தாக்கி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை துடியலூர் அருகே பதுங்கியிருந்தபோது போலீசார் அவர்களை கைது செய்ய முற்படவே தலைமை காவலர் ஒருவரை அவர்கள் அறிவாளன் வெட்டி தப்ப முயன்ற சூழலில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்து மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி, அவருடைய தம்பி கார்த்திக் என்ற காளீஸ்வரன் மற்றும் அவர்களது உறவினரான மதுரையைச் சேர்ந்த குணா என்கின்ற தவசி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் மூன்று பெரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து காலில் இருந்த துப்பாக்கி கொண்டு அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அம்மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மேற்பார்வையில், துணை ஆணையர் தேவநாதன், ஆய்வாளர்கள் அர்ஜூன் மற்றும் லதா ஆகியோர் அடங்கிய குழுவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட வேண்டிய அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து வருகின்றனர்.

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் மூன்று நாட்கள் காவல் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி காவல்துறையினர் தரப்பில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனும் உன் மீதான விசாரணை இன்று நடைபெறும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மூவரும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து கூறிய காவல் துறை அதிகாரிகள்,கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் அடையாள அணிவகுப்பு நடத்தியதில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் காதலன் இவர்கள் தான் என்று குற்றவாளிகளை உறுதி செய்துள்ளதாகவும் இந்த வழக்கில் 30 தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு தருவதாகவும் தெரிவித்தனர்.மேலும் போலீஸ் காவலில் கைதான மூன்று பேரிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் கூடுதல் தகவல்கள் கிடைக்கப் பெறும் எனவும் கூறினர்….
மேலும் இந்த நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி சிந்து ஒரு நாள் மட்டும் காவல்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு.








