• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

ByG.Suresh

Apr 12, 2024

சிவகங்கை அருகே பறக்கும்படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ. 3 லட்சத்தை  பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சிவகங்கை மதகுபட்டி அருகே இராமலிங்கபுரம் விலக்கில் நிலையான கண்காணிப்பு குழு சிறப்பு வட்டாட்சியர் மா. சங்கர் தலைமையில்  வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே ஒக்கூர் செட்டியார் தெருவைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சரவணன்(45) என்பவரது இரு சக்கர வாகனத்தை ஆய்வு செய்தனர்.

அதில், ரொக்கம் ரூ. 3 லட்சம்  வைத்திருந்தது தெரியவந்தது. அந்த தொகை கொண்டு சென்றது தொடர்பான ஆவணங்கள் எதையும் சமர்பிக்க வில்லை. இதையடுத்து அந்தப்  பணத்தை  பறிமுதல் செய்து சிவகங்கை மாவட்ட கருவூலத்தில் நிலையான கண்காணிப்புக்குழுவினர் ஒப்படைத்தனர்.