• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நேபாளத்தில் 3 முறைநிலநடுக்கம்.. 6 பேர் பலி

ByA.Tamilselvan

Nov 9, 2022

நேபாளத்தின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
‘நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9.56 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன்பின்னர் இன்று அதிகாலை 2.12 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவானது. இதில், வீடு இடிந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்கள் இந்தியாவின் புதுடெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் உணரப்பட்டன. இந்த நிலையில், உத்தரகாண்டில் இன்று காலை 6.27 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் பல இடங்களில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன என மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்; 5 பேர் காயம் அடைந்துள்ளனர். உத்தரகாண்டிலும் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.