• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நள்ளிரவில் தேனி அருகே பயங்கர விபத்து – 3 பக்தர்கள் பலி

ByP.Kavitha Kumar

Feb 14, 2025

தேனி அருகே நள்ளிரவில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன், பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் 10 வயது சிறுவன் உள்பட மூன்று பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தது.. இதனிடையே சபரிமலையில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு ஓசூருக்குத் திருப்பிக் கொண்டிருந்த வேன் தேனி அருகே சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு இந்த வேனும், பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த விபத்தில் பலர் இரண்டு வாகனங்களில் இருந்தும் கீழே விழுந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 வயது சிறுவன் உள்பட மூன்று பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.