விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கோதண்ட ராமர் கோவில் அருகே இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் சார் ஆய்வாளர் கவுதம் கிடைத்த ரகசிய தகவலின் படி கோதண்டராமர் கோவில் அருகே வாகன சோதனை ஈடுபட்ட பொழுது பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டி வந்த டாடா இண்டிகோ காரில் வந்த நபர்கள் அங்கு உள்ள முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்த கோபால் ராஜா மகன் கணேசன் வயது 34 இவருக்கு விற்பனைக்கு கொடுக்க வந்த பொழுது அவர்களிடமிருந்து 55 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் விசாரணை செய்ததில் பெங்களூரில் இருந்து மொத்தமாக குட்கா வாங்கி வந்து பி டி ஆர் நகர் பகுதியில் முருகன் மகன் முத்து மணிகண்டன் என்பவர் மூலம் சில்லறை விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதாக தெரியவந்தது. இவரும் கீழ ராஜகுல ராமன் ரெங்கப்பநாயக்கன்பட்டி தெருவை சேர்ந்த விஜயராமர் மகன் பிரகாஷ் வயது 29 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 55 கிலோ குட்கா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
