
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர், சக்தி நகர், பசும்பொன் நகர், சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளவெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினார்கள் .

அப்போது பசும்பொன் நகர் தகர செட்டில் சந்தேகத்திற்கான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து உடனடியாக தகர செட்டை சோதனை நடத்தினார்கள். அங்கு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த. கணஞ்சாம்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் (வயது 60) ,செந்தில்குமார்( வயது30 ),பசும்பொன் நகரை சேர்ந்த மாரீஸ்வரன் (வயது 29 ) ஆகியோர் மீது வெம்பக்கோட்டை போலீசில் புகார் கொடுத்ததன் பேரில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தார்.
மேலும் தகர செட்டில் இருந்த சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட ஐந்து பெட்டிகளில் இருந்த சரவெடிகள் மற்றும் 20 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.
