• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி 3 பேர் கைது..,

ByRadhakrishnan Thangaraj

Oct 24, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உள்ள சேத்தூர் அதிமுக நிர்வாகியான பட்டுராஜன்(52,) அ.தி.மு.க மகளிரணியை சேர்ந்த  கந்தலீலா (55) மற்றும் ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) ஆரம்பித்து இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை கூறி  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் பல கோடி ரூபாய்  மோசடியில் ஈடுபட்டதாக பணத்தை இழந்த வெம்பக்கோட்டையை சேர்ந்த பழனியப்பன் மாவட்ட சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில் விருதுநகர் சிபிசிஐடி போலீஸார் அதிமுக நிர்வாகிகளான பட்டுராஜன்,  கந்தநிலா, ராணி நாச்சியார்  ஆகிய  மூவர்  மீதும் விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இருடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன்

சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராகவும், சேத்தூர் பேரூராட்சி 8 வது வார்டு கழகச் செயலாளர், செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.