3வது அலை ஆரம்பம் – திருச்சியில் கொரோனா தொற்று அதிகரிப்பு, வணிக நிறுவனங்களில் அதிக கூட்டம் கூடினால் கடையை மூடவும், தெருக்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் உழவர் சந்தை மைதானத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டும் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்போம் என பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் சான்றிதழ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு….
முதல் அலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தார்கள், இரண்டாவது அலை தொற்று குறைய பொது மக்கள் முககவசம் அணிவது குறைந்துள்ளது.
நேற்று ஸ்ரீரங்கம் சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் ஆடி இரண்டாவது வெள்ளி என்பதால் அதிக அளவில் கூட்டம் கூடியது, திருச்சி மாவட்டத்தில் ஐந்து கோவில்களில் ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை அன்று பொதுமக்கள் தரிசனம் கிடையாது. ஆகம விதிப்படி பூசாரிகள் பூஜை மற்றும் செய்வார்கள்.
அதேபோன்று ஆடி பெருக்கு அன்று காவிரி ஆற்றங்கரை ஓரத்திலும் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது
மூன்றாவது அலை துவக்கம் ஆகியுள்ளது, கேரளாவில் தினசரி பாதிப்பு 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்திலும் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இது மேலும் உயராமல் இருக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி இருக்க வேண்டும்.
பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால் கொரனாவை குறைக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.
மாவட்டத்தில் 30 லட்சம் மக்கள் தொகையில் 21.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும், இரண்டாவது தவணை தடுப்பூசி 8.8 லட்சம் பேருக்கு போடப்பட்டு உள்ளது, முதல் தவணை தடுப்பூசி 7.20 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது.
10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டால் 50 சதவீதம் பேரை கவர் செய்துவிடலாம் தடுப்பூசி சிறந்த மருந்து.
வணிக நிறுவனங்களில் அரசு வழிகாட்டுதலை பின்பற்றாமல், அதிக அளவில் கூட்டம் கூடினால் அந்த கடையை மூடுவதற்கும், தெருக்களை தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வீதம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் வரும் நாட்களில், தினசரி 5 – 6 ஆயிரம் பேருக்கு பரிசோதனை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
சிறுத்தை புலி தாக்குதல் தொடர்பாக ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது தீயணைப்பு துறையினர் வனத்துறையினர் இருக்கின்றனர் மேலும் சிறுத்தையை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் இல்லையெனில் காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.