• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலக தமிழர் தின 2ம் நாள் நிகழ்ச்சி

ByAlaguraja Palanichamy

Jan 12, 2023

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் 2ம் நாள் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.
உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கினைக்கும் விதமாக அயலதமிழர் தினம்(2023)அனுசரிக்கப்படுகிறது. ஜன. 11 மற்றும் 12 ஜனவரி 2023-ம் தேதிகளில் அயலக தமிழர்தினம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.இன்று காலை முதல் நாள் நிகழ்ச்சியாக அயலக தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் முனைவர். டி.ஜெகநாதன் ஐ.ஏ.எஸ் சிறப்புரையாற்றினார்.
நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சி சிறப்பாக முடிந்துள்ளநிலையில் இன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று தமிழகத்தைச் சேர்ந்த விருதுநகர் மாவட்டம், சிவகாசி சேர்ந்த, மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர்சசீந்திரன் முத்துவேல் எம்.பி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.


சசீந்திரன் முத்துவேல் பேசும் போது.. தமிழர்கள் உலகத்தில் பல நாடுகளில் பெரிய பதவிகளில் வகிக்கின்றனர்.உலகம் முழுவதும் தமிழ்ர்களுக்கு, தமிழில் பேசுவதற்கும் படிப்பதற்கு தமிழ் மறையாமல் இருப்பதற்கு தமிழ் கல்வியே, சிறந்தது. தமிழ் மொழியை கற்பதற்குதொலை தூர கல்வி வாயிலாகவும், இணைய தள வாயிலாகவும் தமிழ் படிப்பதற்கு உலகத்தில் அதிகம்மாக வாழும் நாடுகளில் இதனை ஏற்படுத்தி தரவேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது போன்று பல்வேறு தகவல்களை முன்வைத்து அவர் பேசினார்.
பேராசிரியர்
முதுமுனைவர் பழனிச்சாமி பழனிச்சாமி
நமது அரசியல் டுடே, கெளவ ஆசிரியர்