
இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சார்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான 2-ம் நாள் பயிற்சி முகாம் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் தொடர்பான கையேட்டினை
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் பெற்றுக் கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சார்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் தொடர்பான கையேட்டினை குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் பெற்றுக் கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் புதுடெல்லி துவாரகா IIIDEM ஆடிட்டோரியத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சார்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் (Two days Training Programme for Booth Level Agents (BLAs) of Tamil Nadu & Puducherry) நேற்று (22-05-2025) தொடங்கியது. இப்பயிற்சி முகாமினை இந்திய தலைமை தேர்தல் கமிஷ்னர் ஞானேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

இரண்டாம் நாளான இன்று (23-05-2025) நடைபெற்ற பயிற்சி முகாமில் குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், கடம்பூர் ராஜ், வாக்குச்சாவடி நிலை முகவர்களின் முகவர்களின் நியமனம் (BLA), பொறுப்புகள், வாக்குச்சாவடி விழிப்புணர்வு குழுக்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO), வாக்காளர் பதிவு அலுவலர் (ERO), வாக்குச்சாவடிக்குட்பட்ட மாதிரி வரைபடம் அடங்கிய வாக்குச்சாவடி முகவர்களுக்கான கையேட்டினை பயிற்சி அலுவலரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இப்பயிற்சி முகாமில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிகழ்வில் அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவருமான முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

