• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஜன.29-ந்தேதி பழனி தைப்பூச திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்

ByA.Tamilselvan

Dec 21, 2022

பழனிதிருக்கோயிலில் தைப்பூச் திருவிழா ஜன.29ம் தேதி கொடியேற்றத்துடன தொடங்குகிறது.
3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகள் குறித்து கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தின்போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.