• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் – முத்தரசன்

ByA.Tamilselvan

Nov 25, 2022
Mutharasan

ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் பேட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள சுதந்திரமான அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அரசியல் சட்டத்தை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் நடந்துள்ளது. இந்த அவசர நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்விஎழுப்பியுள்ளது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டை சனாதனம் ஒற்றுமைப்படுத்தியது என ஆளுநர் பேசிவருகிறார். உண்மையில் சனாதனம் மக்களை பிளவுபடுத்தியது. ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து அவர் செயல்படட்டும். ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும். நாளை (26-ந்தேதி) விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.