• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோவையில் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட்

BySeenu

Aug 30, 2024

தமிழ்நாடு செஸ் அசோசியேசன் சார்பில் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் போட்டிகள் கோவை அலங்கார் ஹோட்டலில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சக்தி சுகர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது‌.

தமிழ்நாடு செஸ் அசோசியேசன் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம் கூறுகையில், “தமிழ்நாடு செஸ் அசோசியேசன் சார்பில், கோவையில் நாளை 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் நடத்த உள்ளோம். 2400 பாயிண்டுகள் மற்றும் மூன்று டைட்டில் வாங்கும் வீரருக்கு இன்டர்நேஷனல் மாஸ்டர் என்ற பதவி வரும். அதை பெறுபவர்கள் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் ஆக முடியும். 100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளை தமிழ்நாடு அரசு முன் வைத்துள்ளது. அதற்கு முன்பாக 100 இன்டர்நேஷனல் மாஸ்டர்களை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு செஸ் அசோசியேசன் சார்பில் கடந்த ஒரு வருடமாக இந்த டோர்னமெண்டை நடத்தி வருகிறோம். இதுவரை 25 டோர்னமெண்ட் முடிவடைந்துள்ளது. 26வது டோர்னமெண்ட் நாளை ஆரம்பமாகிறது. இதில் இந்த ஆண்டு இதுவரை, இந்தியாவில் 33 நார்ம்ஸ் வாங்கி இருக்கிறார்கள். இதில் தமிழ்நாடு மட்டும் 13 நார்ம்ஸ் வாங்கியுள்ளது. மீதியுள்ளதில் 6 நார்ம்ஸ் இந்தியாவிலும் மற்றவைகளை வெளிநாட்டவரும் வாங்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள நார்ம்ஸில் மூன்றில் இரண்டு பங்கை தமிழ்நாடு பெற்றுள்ளது. இங்குள்ள வீரர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. அதிக செலவில்லாமல் அயல் நாட்டிற்கு செல்லாமல் நார்ம்ஸை இங்கு வாங்க முடிகிறது. இந்த டோர்னமெண்ட் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை நான்கு பேர் இன்டர்நேஷனல் மாஸ்டர் டைட்டிலை வாங்கி உள்ளனர்.” என்றார்.

மேலும், குறைந்தபட்சம் வருடத்திற்கு 10 பேரை இன்டர்நேஷனல் மாஸ்டர் டைட்டிலை வாங்க வைத்து விட்டால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கோவையில் மட்டும் 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் இருப்பதாகவும் இதில் 100 முதல் 120 பேர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதாகவும் செஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களை செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்ட ஊக்குவித்து வருவதாகவும் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு அசோசியேஷன் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 30 கிராண்ட் மாஸ்டர்கள் இருப்பதாகவும் அடுத்து எட்டு ஆண்டுகளில் 100 கிராண்ட் மாஸ்டர்கள் என்ற இலக்கை தமிழ்நாடு எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.