தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தில் இந்திய போலீஸ் சர்வீஸ் பயிற்சி அகாடமி உள்ளது. இங்கு பயிற்சி பெறும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலங்களின் மேற்கொள்ளும் போலீஸ் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள செல்வார்கள்.

அதுபோல் தமிழ்நாடு போலீஸ் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள 26 பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐதரபாத்தில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தனர். தமிழ்நாடு போலீஸ் சார்பில் வரவேற்று அழைத்து சென்றனர்.
இந்த 26 பேரும் தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் தமிழ்நாட்டில் போலீசாரின் செயல்பாடுகள்,பணிகள் குறித்து விளக்கப்படும் என கூறப்படுகிறது. சுமார் ஒரு வார கால பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.














; ?>)
; ?>)
; ?>)