மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 125_நாள் சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் நிறைவு பெற்றது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா .காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்த, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் சைக்கிள் பயணம் 11 மாநிலங்களின் வழியாக 25 நாட்கள் கடந்து நேற்று மாலை (மார்ச்_31)ம் தேதி இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி வந்தடைந்தனர்.

கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திராவின் தலைவயிலில், சைக்கிள் பயண வீரர்கள்,வீராங்கனைகளை. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் சாந்தி தலைமைமில் காவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினரது 25_நாட்கள் சைக்கிளில் பயணப்பட்டு வந்த இருபால் வீரர்களுக்கு. மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் பாட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் அழகு மீனா இ.ஆ.ப., காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின். இ.கா.ப. முன்னிலையில் ஒவ்வொரு வீரர்களையும் பாராட்டி பதக்கம் அணிவித்தார்.

நிகழ்வில் குமரியை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் விக்கிரகம் பணியில் வீர மரணம் அடைந்த தின் அஞ்சலியாக. வீரர் விக்கிரகமின் தாய், மனைவி, குடும்பத்திற்கு டைரக்டர் ஜெனரல் ரஜ்விந்தர் சிங் பாட்டி, சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை யினரது இந்த சைக்கிள் பயணம் மக்கள் மத்தியில் ஒரு சகோதரத்தின் உணர்வையும், நாட்டின் மீது நமது பற்றையும். இந்தியாவின் கடல் பரப்பை காப்பதிலும் ஒரு கடமை சார்ந்த உணர்வையும் ஏற்படுத்தி உள்ளதாக தென்மண்டல ஐ.ஜி. சரவணன் வீரர்களின் பாராட்டு உரையில் தெரிவித்தார்.

கன்னியாகுமரி நிகழ்வில் பொது மக்கள் அதிக அளவில் பங்கேற்றது. நமது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பணியை மானசீகமாக பாராட்டியதை உணர்த்தியது.
தொழில் பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் ராஜ்விந்தர்சிங் பாட்டி, சரவணன் ஐ.ஜி,ஜோஸ். ஐ.ஜி.,குமரிமாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலினுடன் சைக்கிள் வீரர்கள், வீராங்கனைகள் குழு நிழல் படம் எடுக்கப்பட்டது.

நிகழ்வில் கூடுதல் டைரக்டர் ஜெனரல் சுதிர்குமார்,ஐ.ஜி.ஜோஸ்மோகன், கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கலை நிகழ்வுகளுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.






