• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கைலாசா நாட்டில் 25,000 பேருக்கு வேலை!! நித்தியானாந்தா

ByA.Tamilselvan

Nov 22, 2022

கைலாசா நாட்டில் 25,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எ​ங்கே தான் இருக்கிறது கைலாசா? என்ற கேள்விக்கே இதுவரை விடை கிடைக்காத நிலையில் இப்போது அங்கே வேலை வாய்ப்பு என்ற ஒரு விளம்பரம் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது… இதற்கு தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தால் போதும் தேர்வு செய்யப்படுவார்கள்,பெங்களூர், திருவண்ணாமலை,காசி, சேலம், ஐதராபாத் உள்ளிட்ட கைலாசா மையங்களில் ஒராண்டு பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் பணி அமர்த்தப்படுவார்கள்என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு பேசிய போது முதலில் பிடதி ஆசிரமத்தில் தகுதிக்கேற்ப வேலை உள்ளது என்றும் திறமையை பொறுத்து கைலாசாவிற்கே வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளம்பிங் வேலை முதல் ஐடி விங்க் வரை தகுதிக்கேற்ப வேலை உள்ளது என்றும், தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி என அத்தனையும் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே ஆன்மிக பயிற்சியும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் இந்த விளம்பரம் குறித்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.