• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 25 பேர் வேட்புமனு தாக்கல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 30 ந்தேதி தொடங்கி நேற்று 6 ந் தேதி வரை நடந்தது.

இந்த வேட்புமனுக்களை சோழவந் தான் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிமாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் சண்முக வடிவேல் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தொகுதி பொறுப்பு அலுவலர் பொது மேலாளர் வீராச்சாமி முன்னிலையில் பெற்றார். உடன் உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார்,தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா, வருவாய் ஆய்வாளர்கள் ரகுபதி, கௌதம் குமார் ஆகியோர் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1.தி.மு.க. – எம்.எல்.ஏ., வெங்கடேசன்,
(மாற்று) மணி மேகலை.

  1. அ.தி.மு.க. -முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம்,
    (மாற்று) ஆதிராதீப்தி .
  2. த. வெ.க. – முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பையா
    (மாற்று) தாமோதரன்.
  3. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள்முன்னேற்ற கழகம் -டாக்டர் பாலமுருகன்.
    (மாற்று) அஜய் சுபாஷ்.
  4. நாம் தமிழர் -நாகலட்சுமி
    (மாற்று) பவித்ரா.
    6.புதிய தமிழகம் – ரகு ,
  5. வாழ்வுரிமைக் கட்சி
    – தங்கப்பாண்டி
  6. ராமதாஸ் (சுயே)
  7. கோபால் (சுயே)
  8. சிவாய ஆதித்யா (சுயே)
  9. ரஞ்சித்குமார் (சுயே)
  10. குணசேகரன் (சுயே)
  11. பாபு (சுயே)
  12. நாகராஜன் (சுயே)
  13. பாலமுருகன் (சுயே)
  14. கிருஷ்ணசாமி (சுயே)
  15. பாலமுருகன் (சுயே)
    இதில் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் கூடுதலாக 2 மனுவும் நாம் தமிழர் வேட்பாளர் நாகலட்சுமி கூடுதலாக 1 மனுவும் தாக்கல் செய்துள்ளதால் மொத்தம் 25 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.