மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் அமைந்துள்ள பவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்றது.

9 மணி அளவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றி மாணவர்கள் வருதல் அதனைத் தொடர்ந்து கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை ராஜராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கனரா வங்கி மேலாளர் சுபாஷினி காவல் ஆய்வாளர் ரவி கண்ணன் வேளாண்மை கல்லூரி முத்துராமலிங்கம் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். ஆசிரியை மகாலட்சுமி நன்றியுரை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின ஆண்டு விழாவில் பள்ளி முதல்வர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். ஆசிரியை அனிதா வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியை விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். காடுபட்டி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் முத்து பரிசு வழங்கினார் பள்ளியின் ஆண்டு அறிக்கையை ஆசிரியர் ஜெனகைமாரி வாசித்தார். அதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது ஆசிரியை இளங்கேஸ்வரி நன்றி கூறினார்.







