சிவகங்கை மாவட்டம், சிவகங்கையை ஆண்ட வீர பேரரசி வேலுநாச்சியாரின் 227 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அவரது வாரிசுதாரர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.

சிவகங்கை சீமையை ஆண்டு வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு மீண்டும் இழந்த மண்ணை மீட்டெடுத்த வீர பேரரசி வேலுநாச்சியாரின் 227 வது நினைவு தினம் சிவகங்கை தெப்பக்குள கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப் பட்டு வருகிறது. முன்னதாக வாரிசுதாரர்களான சிவகங்கை மண்ணின் டி.எஸ்.கே மதுராந்தகி நாச்சியார், இளைய மன்னர் மகேஷ் துரை ஆகியோர் மாலை அனிவித்தும், மலர் வளையம் வைத்தும் முதல் மரியாதையை செலுத்தினர். அதனை தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையார், திமுக நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான துரை ஆனந்த், அதிமுக சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், திமுக அயலக அணி தலைவர் கேப்டன் சரவணன் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் பங்கேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நினைவு தினத்தை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
