• Tue. Dec 10th, 2024

21 மாநகராட்சி மேயர் தேர்வு செய்யும் பணி தீவிரம்

21 மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான நபர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது. 134 நகராட்சி தலைவர், துணை தலைவர், 435 பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரையும் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மறைமுகத் தேர்தலில் யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து மாவட்ட வாரியாக திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர். பட்டியலை அனுப்பியவுடன், வேட்பாளர்களை இறுதிசெய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மார்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.