• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குமரியில் தோள் சீலை போராட்ட வெற்றியின் 200 வது ஆண்டு மாநாடு

குமரியில் நடைபெறும் தோள்சீலை மாநாட்டில் தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் பங்கேற்பு கருத்தரங்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளில் குமரி மாவட்டத்தையும்,உள்ளடக்கியது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. மன்னர் ஆட்சியின்போது உயர் சாதி குறிப்பாக நாயர், பிள்ளை, ஐயர்,போற்றி இனத்து பெண்கள் மட்டுமே மார்பகத்தை மறைத்து ஆடை அணியும் உரிமை பெற்றிருந்தனர்.ஏனைய இனத்தைச் சேர்ந்த பெண்கள் தாழ்ந்த சாதியினர் இவர்கள் இடுப்பு வரை மட்டுமே உடை அணிய முடியும்.உடலின் மார்பக பகுதி ஆடையால் மறைக்க கூடாது.என்பது மட்டும் அல்ல பெண்களின் மார்பக அளவிற்கு ஏற்ப வரியும் கட்ட வேண்டும் என்ற கொடுமையான சட்டத்தை எதிர்த்து அக்காலத்தில் ஏற்பட்ட தோள் சீலை போராட்டம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றையே மாற்றியமைத்த ஒரு உண்மையான புரட்சி போராட்டம்.இந்த புரட்சிக்கு வித்திட்டவர்கள்.கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகை மற்றும் இங்கிலாந்து அரசி விக்கிட்டோரிய மகாராணியின் ஆணையும் தோள் சீலை போராட்டத்தை வெற்றியடைய காரணமாக இருந்தது.குமரியின் வரலாற்று பெண்களின் தோள் சீலை போராட்டத்து வெற்றியின்.200_வது ஆண்டு மாநாடு குமரியில் விரைவில் நடக்க இருப்பதையும்.இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மற்றும் கேரள முதல்வரும் பங்கேற்க இருப்பதை.நாகர்கோவிலில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.