• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

2000 நோட்டுகள் தடை : நவீன துக்ளக்கின் முட்டாள்தனம்..,துஷார்காந்தி ஆவேசம்..!

Byவிஷா

May 20, 2023

ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருப்பது, நவீன துக்ளக்கின் முட்டாள்தனம் என்று துஷார்காந்தி ஆவேசமாக ட்விட்டரில் பதவிட்டுள்ளார்.
2000 மதிப்புடைய நோட்டு என்பது முட்டாள்தனமான நடவடிக்கை இந்த நோட்டை அச்சிட்டு, புழக்கத்தில் விட எவ்வளவு செலவானது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வரை இன்றைய நவீன துக்ளக் தனது முட்டாள்தனங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்று துஷார் காந்தி பதிவிட்டுள்ளார்.
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. மே 23 முதல் இந்த நோட்டுகளை வங்கியில் செலுத்தி அதற்கு மாற்றாக குறைந்த மதிப்புடைய நோட்டுகளாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக 20000 ரூபாய் வரை ஒரு நபர் இந்த நோட்டை வங்கியிலோ அல்லது ஆர்.பி.ஐ. அலுவலகத்திலோ மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டு வெளியிட்டு 7 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் தற்போது அது செல்லாது என அறிவித்திருப்பது முட்டாள்தனமான செயல் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், “முட்டாள்தனத்தின் உச்சமாக 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்ட அரசு அதை புழக்கத்தில் விட எத்தனை ஆயிரம் கோடிகள் செலவிட்டது என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். அதுவரை இன்றைய நவீன துக்ளக் தனது முட்டாள்தனங்களில் இருந்து தப்பிக்க முடியாது” என்று துஷார் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.