ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அர்ஜூன் பிரசாத் யாதவ் (58). இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமான பணியில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 5-ந்தேதி குலசேகரன்பட்டினம்- உடன்குடி சாலையில் தருவைகுளம் பகுதியில் உள்ள மதுபான கடையில் இரவு மது அருந்தி கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டார்.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த முத்து செல்வன் (27), நாசரேத் வெள்ளரிக்கா ஊரணியை சேர்ந்த மூர்த்தி ராஜா (27) ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நாங்கள் இருவரும் மதுபானக்கடையில் மது அருந்திக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு மது அருந்திய அர்ஜூன் பிரசாத் யாதவுக்கும், எங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவரது கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்தோம். பின்னர் அவரது உடலை கடைக்கு பின்பகுதிக்கு கொண்டு சென்று பெட்ேரால் ஊற்றி எரித்துவிட்டு தப்பினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சக தொழிலாளர்கள் போராட்டம்!

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட அர்ஜூன் பிரசாத் யாதவ்வின் உடல் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க உறவினர்கள் வாங்க மறுத்து நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 8.15 மணிக்கு கல்லாமொழியில் உள்ள உடன்குடி அனல்மின் நிலைய நுழைவு வாயில் முன்பு அர்ஜூன் பிரசாத் யாதவ்வின் குடும்பத்தினர், உறவினர்கள், வட மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏஎஸ்பி மதன், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொலையான தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தினர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் அர்ஜூன் பிரசாத் யாதவ்வின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் இழப்பீட்டு தொகை வழங்கியது.
இதைதொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். எனவே. அடுத்தகட்டமாக அர்ஜூன் பிரசாத் யாதவ்வின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.” என்பது குறிப்பிடத்தக்கது.











; ?>)
; ?>)
; ?>)