• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

2 மாதங்களில் 32 வெளிநாடு தமிழர்கள் இறப்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி….

Byadmin

Jul 24, 2021

கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளிநாடு வாழ் தமிழர்கள் 32 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என்று சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதி ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில் “தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகளுக்காக புதிய வீடுகள் கட்டி தரப்படும் அதிமுக சரியாக ஆட்சி புரியததால் மக்கள் திமுகவை தேர்வு செய்துள்ளனர் 2 மாதங்களில் வெளிநாடுகளில் 32 தமிழர்கள் இறந்து உள்ளனர் 32 பேரில் 30 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13553 இலங்கை அகதிகள் குடும்பங்கள் அகதி முகாமுக்கு வெளியே வசித்து வருகிறது தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும்” என கூறினார். பின்னர் கொரோனா தடுப்பூசி மையத்தினை அமைச்சர் ஆய்வு செய்தார் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளிடம் கொரோனா தடுப்பூசி குறித்து பேசினார் பொதுமக்கள் மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.