• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஜன.16 முதல் சென்னையில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி

ByA.Tamilselvan

Jan 2, 2023

சென்னையில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஜன.16 துவங்கி நடைபெறகிறது என பள்ளிகல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து சென்னையில் ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த உள்ளன. இந்நிலையில், சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன என பா.ப.சி.-யின் செயலாளர் எஸ்.கே. முருகன் தெரிவித்துள்ளார்.