நீர் துறையில் சிறந்து விளங்கும் நகரங்களையும், மாநிலங்களையும் கௌரவிக்கும் வகையில், மார்ச் 5ஆம் தேதியன்று முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள் குடியரசுத்தலைவரால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 மார்ச் 5-ஆம் தேதி விஞ்ஞான் பவனில் முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகளை வழங்கவிருக்கிறது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தலைமை தாங்கும் இந்த நிகழ்ச்சியில் நீர் துறையில் சிறந்து விளங்கும் நகரங்களும், மாநிலங்களும் கௌரவிக்கப்படும். நகரங்கள் மற்றும் மாநிலங்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பிரதிபலிக்கும் வகையில், 130 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மதிப்புமிக்க குடிநீருக்கான தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்தந்த மக்கள்தொகை பிரிவுகளில் (1 முதல் 10 லட்சம் வரை, 10 முதல் 40 லட்சம் வரை, 40 லட்சத்திற்கு மேல்) சிறந்த செயல்திறன் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுகளின்படி தங்கம் என்பது முதல் இடத்தையும், வெள்ளி என்பது இரண்டாவது இடத்தையும், வெண்கலம் மூன்றாவது இடத்தையும் குறிக்கின்றன.
மார்ச் 5ல் முதலவாது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள்
