• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓடும் ஆட்டோவில் 19 பவுன் நகைகள் கொள்ளை

Byகுமார்

Jun 30, 2022

மதுரையில் பெண்ணிடம் ஓடும் சேர் ஆட்டோவில் 19 பவுன் நகைகள் கொள்ளை; போலீசார் விசாரணை
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பூமதி என்பவர் உறவினர் திருமணத்தில் பங்கேற்க தந்தை மற்றும் அவரது சகோதரர் உடன் ஷேர் ஆட்டோவில் ஆரப்பாளையத்தில் சென்றிருந்தபோது, வழியில் இரண்டிற்கும் மேற்பட்ட பயணிகள் ஷேர் ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளனர். இந்த நிலையில் பூமதி சாலையில் இறங்கிய பின்னர் தன் பையை சோதனை செய்தபோது கைப்பையில் வைத்திருந்த 19 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்ததை தொடர்ந்து உடனடியாக மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.