தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் உள்ள அணைகள் வேகமாக நிரம்பிவருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18அடி உயர்ந்துள்ளது.
53அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடி அணையின் நீர்மட்டம் தற்போது 51அடியை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் 639கன அடி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மாலைக்குள் அணை முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொடுமுடி அணை நிரம்புவதால், களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அணைக்கு வரும் நீர் வெளியற்றப்பட்டுவதால், கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.