தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உருவாகி 50 வது பொன்விழா ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது ,
விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் ,ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் , வைகை சாலை பிரிவிலுள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
இதனையடுத்து ஊர்வலமாகச் சென்று ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள் .
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சேட்.அருணாசலம், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் பிரபு ,சுமதி வடிவேல், நிர்வாகிகள் பொன்முருகன், கவிராஜன், அருண்மதி கணேசன், வீரக்குமார், பரத், சாம்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.