• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தலைமறைவாக இருந்த 174 குற்றவாளிகள் கைது..,

ByS.Ariyanayagam

Jan 19, 2026

திண்டுக்கல்லில் தலைமறைவாக இருந்த 174 நீதிமன்ற பிடியானை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். எஸ்.பி. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் மேற்பார்வையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி வரை 8 நாட்களில் கொலை, போக்சோ, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த 174 நீதிமன்ற பிடியானை குற்றவாளிகளை போலீசார் கைது செய்து நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.

மேலும் கடந்த 1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரெளடிசம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்து 26 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.