மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் உ.வாடிப்பட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.,

சோதனையின் போது சந்தேகப்படும் படி, வத்தலக்குண்டில் இருந்து உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த காரை இடைமறித்து சோதனை நடத்தியதில் காரில் கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.,

இந்த கஞ்சா கடத்தல் தொடர்பாக திருவண்ணாமலையைச் சேர்ந்த கணவன் மனைவியான பாரத் – ஆயிஷா பானு மற்றும் தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த செல்வகணபதி, உசிலம்பட்டி அருகே உள்ள குப்பணம்பட்டியைச் சேர்ந்த காசிப்பாண்டி என்ற 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 17 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,











; ?>)
; ?>)
; ?>)