• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சி. ஐ. டி. யு. சார்பில் 16 வது தமிழ் மாநில மாநாடு..,

கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி. ஐ. டி. யு. சார்பில் 16 வது தமிழ் மாநில மாநாடு கோயம்புத்தூரில் வருகின்ற 6, 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டில் ஏற்றப்படும் கொடியை கொண்டு செல்லப்படும் கொடிப்பயண துவக்க நிகழ்ச்சி கன்னியாகுமரியில் துவங்கியது.

  கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான  சி ஐ டி யு சார்பில் 16 வது தமிழ் மாநில மாநாடு கோயம்புத்தூரில் வரும் 6, 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது. கோவையில் CITU தமிழ்மாநில மாநாட்டில் ஏற்றப்படும் கொடியானது கன்னியாகுமரியில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.  இந்த  கொடிப்பயண துவக்க நிகழ்ச்சி சிஐடியு மாநில செயலாளர் தங்கமோகன்  தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து துவங்கியது.  இந்த கொடி பயணம் ஆனது கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டு நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கடந்து வரும் ஆறாம் தேதி கோவை சென்றடைகிறது.  நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் 

பெல்லார்மின், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரசல், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தாஸ், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் சரவண பெருமாள், தென்காசி மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாநில குழு உறுப்பினர் அந்தோணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.