• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

2024 ஜனவரியில் 16 நாட்கள் வங்கி விடுமுறை..!

Byவிஷா

Jan 1, 2024

இன்று புத்தாண்டு தினம், பொங்கல், குடியரசு தின விழா, வார இறுதி விடுமுறை நாட்கள் என இந்த ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது உள்ளூர் பண்டிகைகளுக்கேற்ப மாறுபடும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் போதோ, சுற்றுலா செல்லும் போதோ ஏ.டி.எம். இயந்திரங்களில் பணமில்லாம கடைசி நேரத்தில் திண்டாடாமல் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.
பொதுமக்கள் தங்களது வரவு – செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.
அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. ஜனவரி மாதத்தில் சுமார் 16 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத வங்கி விடுமுறை பட்டியல்:

ஜனவரி 1, 2024 – திங்கட்கிழமை – புத்தாண்டு தினம்
ஜனவரி 7, 2024 – ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 11, 2024 – வியாழக்கிழமை – மிஷினரி தினம் (மிசோரம்)
ஜனவரி 12, 2024 – வெள்ளிக்கிழமை – சுவாமி விவேகானந்தா ஜெயந்தி (மேற்கு வங்கம்)
ஜனவரி 13, 2024 – சனிக்கிழமை – 2வது சனிக்கிழமை
ஜனவரி 14, 2024 – ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 15, 2024 – திங்கட்கிழமை – பொங்கல்ஃதிருவள்ளூர் தினம் (தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம்)