• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வ உ சியின் 154வது பிறந்த நாள் விழா..,

ByVasanth Siddharthan

Sep 5, 2025

வ உ சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-

கோபி செட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளரிடம் பேசுகையில் :- அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ஒன்றிணைந்தால் தான் இந்த தேர்தல் அமோக வெற்றி பெற முடியும் அதற்கு பத்து நாள் கெடு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார் இது குறித்து கேட்டபோது

செங்கோட்டையன் இணைய வேண்டும் என்று சொல்கிறார் .பொதுச் செயலாளர் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார் அதுதான் எங்களுடைய கருத்து. பொதுச் செயலாளர் அவருடைய கருத்துக்கு மாற்றுக் கருத்து அனைவரும் சொல்லிக் கொண்டு உள்ளனர் என்ன கருத்து என்பதை எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி யார் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் .

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் சென்று பொதுச் செயலாளரை சந்தித்து ஒன்றிணைைய வேண்டும் என்று கூறியுள்ளனர் அதை பற்றிய கருத்து

அதையெல்லாம் விட்டு விட அப்பா அதையெல்லாம் பேசி முடித்து விட்டோம். அது உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது என கூறினார்.