• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

ByA.Tamilselvan

Nov 28, 2022

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்
எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டியடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறைபிடிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது. இந்நிலையில், இலங்கையின் நெடுந்தீவு அருகே 15 தமிழக மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.