• Fri. Apr 19th, 2024

145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு…

Byகாயத்ரி

Aug 31, 2022

ஸ்பானிய மற்றும் போர்த்துகீசிய பழங்கால ஆராய்ச்சியாளர்கள், மான்டே அகுடோ டைனோசர் புதைபடிவ தளத்தில் ஒரு சவ்ரோபாட் டைனோசரின் பகுதியளவு எலும்புக்கூடு அகழ்வாராய்ச்சிப் பணியின் போது சுமார் 25 மீட்டர் (82 அடி) நீளமுள்ள மற்றும் சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு டைனோசர் எலும்புக்கூட்டின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.இந்த எலும்புக்கூடு நீண்ட கழுத்து மற்றும் வால்களால் வகைப்படுத்தப்படும் நான்கு கால்கொண்ட டைனோசர். இது தாவரங்களை உண்ணும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். டைனோசரின் புதைபடிவ துண்டுகள் முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் மத்திய போர்ச்சுகலில் உள்ள பொம்பல் நகரில் ஒரு சொத்து உரிமையாளரால் கட்டுமானப் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *