ஆந்திரப்பிரதேசஅரசுதற்போதுள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து அறிவித்துள்ளது . இந்த புதிய மாவட்டங்கள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது .
அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே , ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு , இந்த மாவட்டங்களில் பணியில் இருந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளையும் மாற்றியமைத்துள்ளது .
மேலும் , புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களையும் நியமித்துள்ளது .
ஆந்திர மாநில அரசு , ஜனவரியில் ஏற்கனவே உள்ள 13 மாவட்டங்களில் இருந்து 26 மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டு , பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை வரவேற்றது .ஜெகன்மோகன் ரெட்டி , 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது , தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் , ஒவ்வொரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார் .
ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன . தற்போது கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள பழங்குடியினப் பகுதிகளை பிரித்து கூடுதலாக ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது .