

மறைந்த கல்வித்தந்தை காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டில் சமூக ஆர்வலர்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முழுவதும் மறைந்த கல்வித் தந்தையின் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டாபட்டி கிராமத்தின் சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானத்தை தொடங்கி வைத்து வழங்கப்பட்டது இதில் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி முன்னிலைவகித்தார் ஊர் முதன்மை காரர்கள் வேலுச்சாமி தலைமை தாங்கினார் மற்றும் கிராம பெரியோர்கள் திரு தண்டபாணி. நாகராஜ். ஞானப்பிரகாசம். மற்றும் காமராஜர் நற்பணி மன்ற உறுப்பினர் பிச்சைமணி. தர்மர். அசோக்குமார்.மலை ராஜன்.அருண் ராஜ் அஜித்குமார் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு காமராஜரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் இதில் ஏராளமான ஊர் பொதுமக்களும் பங்கேற்றனர்.

