• Thu. May 2nd, 2024

வளர்ச்சித்திட்டங்களை விரைந்து செயல்படுத்திட ஸ்டாலின் முன்வருவாரா? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!

மதுரையில் அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வருவாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்..,
மதுரையில் நூலகம் யாரும் கேட்கவில்லை ஆனால் கேட்காத திட்டங்களை செயல்படுத்தி முதலமைச்சர் விழா எடுக்கிறார். மதுரையில் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் முடங்கி கிடக்கின்றன அதில் முதலமைச்சர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எடப்பாடியார் மதுரை மாவட்டத்திற்கு தனி அக்கறை செலுத்தினர் புதிய ஆட்சியர் கட்டிடம், ஆயிரம் கோடியில் ஸ்மார் திட்ட பணிகள், 38 கோடியில் வைகை நதிக்கரையில் சாலைகள், ரிங் ரோட்டில் 4வழிச் சாலைகள் ,நிலத்தடி நீர் உயரும் வகையில் செக்டேம்கள், பொதுப்பணித்துறை கண்மாய், உள்ளாட்சிதுறை கண்மாய் எல்லாம் குடிமரமத்து திட்டத்தின் கீழ் பணிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, அதனைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை உருவாகி கொடுத்து மதுரை சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரி அமைத்துக் கொடுத்தார்.
மதுரை மாவட்ட ஊராட்சி பகுதிகளில் கிராமப்புற இணைப்பு சாலையில் உருவாக்கி கொடுத்தார். அதேபோல் காளவாசல்,ஒபுளா படித்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலங்களை உருவாக்கி தந்தார். அதேபோல் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உருவாக்க ஓடுதளம் அவசியம். அதனைத் தொடர்ந்து மக்களை பாதிக்காத நில எடுப்பு பணியில் அண்டர்பாஸ் திட்டத்தினை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து பெற்று கொடுத்து நிதியினை ஒதுக்கீடுசெய்தார். ஆனால் அந்தத் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒடுதளத்தை விரிவாக்கம் செய்தால்தான் சர்வதேச விமான நிலையமாக அமையும் இவை எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 110 விதியின் கீழ் அம்மா அவர்கள் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சி காலத்தில் நில எடுப்பு நடந்த போது சிலர் நீதிமன்றம் செல்லும் சென்றனர் அதனை தொடர்ந்து அந்த பணிகள் எல்லாம் எடப்பாடியார் தொடர்ந்து விரிவுபடுத்த ஆய்வு மேற்கொண்டார்.

தற்போது திட்டங்களை மாற்றி இருவழிப் பாதையை ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கும்படி திட்டங்கள் போடப்பட்டுள்ளது. அதேபோல் சிம்மக்கல் பெரியார் பகுதியில் மேம்பாலம் அமைக்க நில எடுப்பு பணிகள் முழுவதுமாக தொடங்கிட வேண்டும். அதேபோல சிவகங்கை ரோட்டில் இருந்து கேகே நகர், அண்ணா நகர் பகுதிகளில் பள்ளிகள் கல்லூரிகள் உள்ளது மிகவும் போக்கு நெரிசல் உள்ளது. இதை சீர் செய்ய மேபாலப் பணிகளை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் முதலமைச்சர் மதுரைக்கு வரும் பொழுது போக்குவரத்து தடை செய்யப்படுவதால் அவருக்கு மதுரை மக்களின் போக்குவரத்து நெரிசல் முழுவதுமாக தெரியவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியே தீருவோம் என்று திமுக கூறியது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜெய்க்கா நிறுவனத்திடம் இருந்து மதுரையில் மல்டி ஸ்பெசல் மருத்துவமனை, அதே போல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அதிநவீன உபகரணம் கொண்ட மருத்துவமனை உருவாக்கிட ஜெயிக்கா நிறுவனத்திடம் நிதியைப் பெற்று எடப்பாடியார் கொடுத்தார் இதுதான் வளர்ச்சியாகும். அதேபோல் சிதலடைந்த பள்ளி கட்டிடத்தை தற்காலிகமாக மராமத்து தான் செய்யப்படுகிறது. நிரந்தர தீர்வு காட்டப்படவில்லை ஆனால் மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை நபார்டு திட்டத்தின் நிதியில் எடப்பாடியார் உருவாக்கி கொடுத்தார்.
முதலமைச்சர் மதுரையில் டைடல் பார்க் என்று அறிவித்தார் தற்போது நிலப் பிரச்சினையால் அது கிடப்பில் உள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் மேலூர் வரை நீடிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் அதேபோல் வைகை நிதி, சித்திரை தேரோடு வீதி, திருப்பரங்குன்றம் தேரோடு வீதி ஆகிய பகுதிகளில் எந்த இடையூறும் இல்லாமல் திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்தராயார் மண்டபம் தீ விபத்து ஏற்பட்டபோது அதை சீர் செய்யும் பணிகளுக்கு கற்களை நாமக்கல் மாவட்டத்திலிருந்து எடுக்க அரசாணை போடப்பட்டு பணிகள் நடைபெற்றன. தற்போது அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது என்று மக்கள் கேள்வியாக உள்ளது. அதேபோல் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்தும் மக்கள் கேள்வியாக உள்ளது.
மத்திய அரசிடம் போராடி பல்வேறு திட்டங்களை எடப்பாடியார் பெற்று கொடுத்தார். ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம்திட்டம், மதுரை மக்களின் 40 ஆண்டு குடிநீர் பற்றாக்குறை வராத வகையில்1,296 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் செய்து கொடுத்தார். கட்டமைப்பு பணிகளை முழுமையாக செயல்படுவதால் தான் நாட்டில் வறுமை போக்கப்படும் தற்போது மதுரை வளர்ச்சி என்பது அகோரப் பசியாக உள்ளது
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மதுரை, சேலம், கோவை ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் திட்டம் அறிவிக்கப்பட்டது, அந்தத் திட்டத்திற்கு கூட மதுரையில் இடம் தேர்வு செய்யப்பட்டது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கருணாநிதி நூலகத்திற்கு காட்டும் அக்கறையில் ஒரு சகவீதம் கூட மதுரை மக்கள் வளர்ச்சிக்கு முதலமைச்சர் காட்டவில்லை. இதனால் மதுரை மக்களுக்கு முதலமைச்சர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
மதுரையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முடங்கிப் போய் உள்ளது. அந்த திட்டங்களை முடுக்கி செயல்படுவதற்கு முதலமைச்சர் முன்னுரிமை வேண்டும் ஏழை சொல் அம்பலமாகாது என்பதை போல் இதை முதலமைச்சர் கவனத்தை எடுத்துக் கொள்வாரோ அல்லது கைவிடுவரா? அப்படி நீங்கள் கைவிட்டீர்கள் என்றால் மக்களை உங்களை கைவிட்டு விடுவார்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *