• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெருவில் கிடைத்து 1200 பழமையான மம்மி உடல்

Byகாயத்ரி

Nov 29, 2021

பெருவின் லிமா நகருக்கு அருகே, கஜமர்குயில்லா என்னுமிடத்தில், பூமிக்கடியில் வட்ட வடிவில் காணப்பட்ட அறைக்குள், ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது.


அதன் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு, அமர்ந்த நிலையில் காணப்பட்டது. அதன் அருகே, உணவுப் பொருட்கள் மற்றும் பானைகளும் கிடைத்துள்ளன. சக்லா மலைப் பகுதியில் வாழ்ந்த ஆதிகால மக்களிடையே, இவ்வாறு இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் வழக்கம், நடைமுறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

பதப்படுத்தும் இந்த உடலை மம்மி என கூறுவர்.
தற்போது கிடைத்துள்ள மனித உடலின், துல்லியமான காலத்தை அறிந்திடும் வகையில், ரேடியோ கார்பன் முறையில் பரிசோதிக்க, தொல்லியல் ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்த உடல் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி என்பது குறிப்படித்தக்கது.