• Sat. Apr 27th, 2024

தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்கிறது!! வீட்டுக்கு தேவையான உடனே வாங்கிடுங்க..!

Byமதி

Nov 29, 2021

தினசரி நாம் பயன்படுத்தும் நுகர்பொருட்களை தயாரிக்கக் கூடிய ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனி லிவர், பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கான விலையை 4% முதல் 33% வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன. எரிபொருள் விலை மட்டுமின்றி மூலப் பொருட்கள் விலை உயர்வும் விலை ஏற்றதை தவிர்க்க இயலாததாக இருப்பதாக நிறுவனங்கள் கூறுகின்றன.

ஐடிசி நிறுவனம் பெர்பியும்கள் விலை 7% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. விவில் சோப்பு விலை 9% உயர்த்த உள்ளது ஐடிசி நிறுவனம்.

லக்ஸ் சோப்பு, ஷாம்புக்களின் விலையை 10%க்கு மேல் உயர்த்துகிறது. 19 மில்லி அளவு கொண்ட கம்போர்ட் கண்டிஷனர் விலை 33% வரை உயர்த்தப்பட்டுள்ளது. பார்லிஜி நிறுவனம் 3 மாதங்களில் 15% வரை பிஸ்கட் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களில் 20% வரை உயர்த்த முடிவு எடுத்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனி லிவர் தயாரிக்கும் டவ் சோப்புகள், ஷாம்புகள் மற்றும் பெர்சனல் கேர் பொருட்களின் விலை வரும் வாரங்களில் 12% வரை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் 2வது முறையாக இந்நிறுவனம் விலை ஏற்றத்தை மேற்கொள்கிறது. அதே போல் ரின் சோப்புகள் விலையை 5% உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டைகர், குட் டே, மில்க் பிக்கீஸ் உள்ளிட்ட பிஸ்கட்டுகளை தயாரிக்கும் பிரிட்டானியா நிறுவனம் 3 மாதங்களுக்குள் 7.5% அதற்கு பிறகு 10% விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

மேலும் பல நிறுவனங்கள், நொறுக்கு தீனிகள், தின்பண்டங்கள், அழகு சாதன பொருட்கள் விலையை உயர்த்த முடிவு எடுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *