• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 11 பலி

ByA.Tamilselvan

Apr 17, 2023

மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் அமித்ஷாகலந்து கொண்ட பூஷண் விருது வழங்கு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 11 பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தத்தாத்ரேயே நாராயணுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா விருது வழங்கினார். விழாவில் அம்மாநில முதல்வர் ஷிண்டே மற்றும் துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். கோடைக்காலம் தொடங்கிய நிலையில், நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. காலை 11.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடந்தது. இந்நிலையில், கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் பலர் வெப்பநிலை தாங்காமல் சுருண்டு விழுந்தனர். இதில், 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.