• Tue. Apr 30th, 2024

இந்தோனேஷியா எரிமலை வெடிப்பில் 11 பேர் பலி, 12 பேர் மாயம்..!

Byவிஷா

Dec 4, 2023

மேற்கு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மீட்பு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கும் நிலையில், இது ஒருசில இடங்களில் வெடித்தும் வருகிறது. இதில் குறிப்பாக, இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளில் தான் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழப்புகள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றன. அதுவும், எரிமலைகள் வெடித்துச் சிதறும் போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பூமிக்கு அடியில் இருக்கும் டெக்டோனிக் தகடுகள் மோதும் போது எரிமலைகள் உருவாகின்றன என அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.
இவை அமைதியாக இருந்தாலும், வெடித்துச் சிதறும் போது ஏற்படும் பாதிப்பு பேரழிவாகவே இருக்கும். எரிமலை வெடிப்பில் இருந்து பாயும் எரிமலை பிழம்பு, செல்லும் இடத்தில் எல்லாம் பேரழிவை ஏற்படுத்தும். இந்த நிலையில், மேற்கு இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் உள்ள 2,891 மீட்டர் (9,484 அடி) உச்சத்துடன் இருக்கும் மராபி மலையில் இருக்கும் எரிமலை வெடித்து 3000 மீ உயரம் புகை மண்டலமாக காட்சியளித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மராபி மலையில் ட்ரெக்கிங் மேற்கொண்ட அதாவது மலை ஏறுபவர்கள் 26 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்களில் 14 பேரை நாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், மூன்று பேர் உயிருடன் காணப்பட்டனர் என்றும் 11 பேர் உயிரிழந்து கிடந்தனர் எனவும் பாடாங் தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.
மேலும், மலையில் மொத்தம் 75 இருந்ததாக மீட்புப் பணியாளர்கள் கூறினார்.இதில், 12 பேர் இன்னும் காணவில்லை, அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம், 49 பேர் கீழே இறங்கிவிட்டனர், அவர்களில் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மலையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக கீழே கொண்டு வருவதற்கு மீட்புக் குழுக்கள் இரவு முழுவதும் பணியாற்றி வருகின்றன எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *