• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு காலஅட்டவணை வெளியீடு

Byவிஷா

May 11, 2024

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுதும் வகையில், துணைத்தேர்வுகளுக்கான கால அட்டவiணையை தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த துணை தேர்வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களின் பள்ளிகள் ஃ தேர்வு மையத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.
ஜூலை 2ஆம் தேதி தமிழ், 3ஆம் தேதி ஆங்கிலம், 4ஆம் தேதி கணக்கு, 5ஆம் தேதி அறிவியல், 6ஆம் தேதி விருப்ப மொழிப்பாடம் மற்றும் 8ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.