• Sun. Apr 28th, 2024

10ம் வகுப்பு பொதுத்தேர்வு-கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

BySeenu

Mar 26, 2024

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

அதன்படி கோவையில் மாணவர்கள் 158 மையங்களில் 40329 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் டவுன்ஹால் பிரசன்டேஷன் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் தேர்வு எழுத தவறிய 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு என்ன குறைகள் என்று கேட்டறிந்து அவர்களுக்கு தனித் தேர்வு வைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *