• Sat. May 11th, 2024

நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

BySeenu

Mar 26, 2024

மின்னணு தொழில்நுட்பங்களில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் – மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சிகளை பெற பயனுள்ளதாக இந்த நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்களுக்கு வழி வகுக்கும் என அரசு தொடர்புகள் துறையினுடைய தலைவர் உதயசங்கர் தெரிவிப்பு.

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கிருஷ்ணா கல்வி நிறுவனங்களுக்கும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அனைத்து மாணவர்களும் – மிகச் சிறந்த மின்னணு தொழில்நுட்பங்களில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், நாஸ்காம் அளிக்கும் திறன் மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சிகளை பெறவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பாக திருமதி எஸ்.மலர்விழி மற்றும் நாஸ்டீம் அமைப்பின் கல்வி மற்றும் அரசு தொடர்புகள் துறையினுடைய தலைவர்.திரு உதயசங்கர் அவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இந்த புரிந்துணர்வு நிகழ்வில் 500″க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்த விழாவானது ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் திரு.கே ஆதித்யா அவர்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் முனைவர் கே.சுந்தாராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *