• Fri. Mar 29th, 2024

ஆண்டிபட்டியில் மாகாளி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம்

ஆண்டிபட்டி அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நன்மை தருவார்கள் திருத்தல வளாகத்தில் ஐயப்பசாமி ஆலயம் அமைந்துள்ளது .

இங்குள்ள 49 அடி உயர சர்வசக்தி காளியம்மனுக்கு இன்று நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை தொடங்கியது . 3 நாட்கள் நடைபெற்ற மார்கழி மண்டல உற்சவ விழாவில் உச்சகட்ட நிகழ்ச்சியாக நடைபெற்ற இதில் 49 அடி உயர மாகாளியம்மன் சிலைக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது . இதற்காக 50 அடி உயரத்தில் மூங்கில் கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டது .

நாற்பத்தி எட்டு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் சாரத்தில் வரிசையாக நின்று பால் குடங்களை சுமந்து சென்று மாகாளியம்மன் தலைப்பகுதியில் பாலாபிஷேகம் செய்தனர் . பாலாபிசேக நிகழ்ச்சியை ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர் .

இதையடுத்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் உணவருந்தி தங்களது நாற்பத்தி எட்டு நாட்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர் . 48 நாட்கள் விரதம் இருந்து நாற்பத்தி ஒன்பது அடி உயர மாகாளி அம்மனுக்கு சாரத்தில் ஏறி பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய் தீரும் என்பது ஐதிகமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *