• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஒரே வாரத்தில் மூன்று பிரசவங்களை பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்

அடர்ந்த மலைப்பகுதியில் ஒரே வாரத்தில் மூன்று பிரசவங்களை பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அறுளாவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவருடைய மனைவி காவியா (23 வயது) நிறைமாத கர்ப்பிணியான அவர், நேற்று இரவு 10:52 மணி அளவில் மணியளவில் பிரசவ வலியால் துடித்தார் அதை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, தாளவாடியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அங்கு சென்றது. பிரசவவலி அதிகம் ஆனதை உடனடியாக அறிந்த 108 மருத்துவ நுட்புனர் ரங்கசாமி விட்டிலேயே தக்க உபகரணங்கள் உதவியுடன் பிரசவம் பார்த்தார். சுமார் 11:22 மணியளவில் ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் ரங்கசாமி மற்றும் வாகன ஓட்டுனர் அந்தோனி ராஜ் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
மேலும், இந்த மாதம் (டிசம்பர்- 2022) ஈரோடு மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புனர் மற்றும் ஓட்டுனர் உதவியடன் பார்க்கப்பட்ட/கையாளப்பட்ட மூன்றாவது பிரசவம் என்பது குறிப்பிடத்தக்கது.