• Sat. May 4th, 2024

பசி குறியீட்டு பட்டியலில் 107வது இடம் என்பதை.. இந்தியா நிராகரித்தது

ByA.Tamilselvan

Oct 16, 2022

உலக பசி குறியீட்டு பட்டியலில் இந்தியா 107 வது இடம் என்பதை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
உலக பசி குறியீட்டு பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 121 நாடுகளில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளைவிட இந்தியா மோசமான நிலையில் இருப்பதாக பட்டியல் சொல்கிறது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த உலக பசி குறியீட்டு பட்டியல் தவறானது எனக்கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியா தனது மக்கள் தொகையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யாத ஒரு நாடு எனக்கூறி, நாட்டின் பிம்பத்தைக் கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதி ஆகும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *